சங்கராபுரம் அருகேமக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்

சங்கராபுரம் அருகே மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-09-09 18:45 GMT


சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். சுமார் 20 ஏக்கரில் மக்காச்சோளம் பயிர்செய்துள்ளனர். 2 மாத பயிரான மக்காச்சோளத்தில் தற்போது படைப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த வேளாண்மை உதவி அலுவலர் செல்வகுமார், நோய்தாக்குதலுக்கு உள்ளான பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, படைப்புழு தாக்குதலில் இருந்து பயிரை காப்பது பற்றி அறிவுரை வழங்கினார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்