காஞ்சீபுரத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி பெற்றுக் கொண்டார்.

Update: 2022-12-06 11:08 GMT

கலெக்டர் பங்கேற்றார்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 294 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பாலின சமத்துவ உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த ரா.இளையபெருமாள் என்ற மாணவரை மாவட்ட கலெக்டர் பாராட்டினார்.

கலெக்டர் பார்வையிட்டார்

மாற்றுத்திறனாளி தின விழாவில், முதல்-அமைச்சரால் 6 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட சுமார் ரூ.18 லட்சம் மதிப்பிலான தசைப்பயிற்சி நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தையும், 17 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பிலான மடிக்கணினியையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்