வார விடுமுறை: இன்று 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையை முன்னிட்டு இன்று 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
வருகிற 9-ந்தேதி (2-ம் சனிக்கிழமை), 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 8-ந்தேதி (இன்று) வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 8-ந்தேதி (இன்று) தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 600 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை 9 ஆயிரத்து 299 பயணி கள் முன்பதிவு செய்துள்ளனர்.