கயத்தாறு ஒன்றியத்தில் புதன்கிழமை மக்கள் களம் நிகழ்ச்சி:கனிமொழி எம்.பி. பங்கேற்பு

கயத்தாறு ஒன்றியத்தில் புதன்கிழமை மக்கள் களம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்கிறார்.

Update: 2023-07-11 18:45 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் இன்று (புதன்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். அதன்படி இன்று காலை 9 மணிக்கு கட்டாலங்குளத்தில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டு விழா, 10 மணிக்கு கழுகுமலையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட உள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா, 10.30 மணிக்கு கழுகுமலையில் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து காலை 11 மணிக்கு கயத்தாறு மேற்கு ஒன்றியம் தெற்கு கழுகுமலையில் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் குறைகளை கேட்கிறார். 11.30 மணிக்கு வெங்கடேசுவரபுரம், 12 மணிக்கு துரைச்சாமிபுரம் ஆகிய இடங்களில் மக்கள் களம் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மாலை 3 மணிக்கு நாலாட்டின்புதூர் கே.ஆர்.பங்களாவில் கோவில்பட்டி நகரம், இளையரசனேந்தல் ரோட்டில் ரெயில்வே சர்வீஸ் ரோடு சம்பந்தமான அதிகாரிகள் ஆய்வு கூட்டம், 3.30 மணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 4 மணிக்கு செட்டிக்குறிச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட உள்ள புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா மற்றும் மக்கள் களம் நிகழ்ச்சியும், 5 மணிக்கு திருமங்கலகுறிச்சி பெரியசாமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா மற்றும் மக்கள் களம் நிகழ்ச்சியும், 6 மணிக்கு உசிலங்குளத்தில் மக்கள் களம் நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு அய்யனாரூத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்