அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடக்க முகாம்

திருப்பத்தூர் கோட்டத்தில் அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடக்க முகாம் 2 நாட்கள் நடக்கிறது.

Update: 2023-02-08 17:56 GMT

திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் மு.மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மகளிர் மேம்பாடு மற்றும் நிதிசார் உள்ளடக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள 203 அஞ்சலகங்களிலும் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் புதிய செல்வமகள் சேமிப்பு கணக்குகளை தொடக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது 10 வயதிற்குள்பட்ட அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கணக்கினை தொடங்கி வளமான எதிர்காலத்திற்கு சேமிக்க தொடங்கலாம்.

அன்றைய நாளில் பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நகல், தாய் அல்லது தந்தையின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் ஆதார், பான் அட்டை நகல்களை அருகிலுள்ள அஞ்சலகத்தில் சமர்ப்பித்து, பெற்றோர்களின் மூலமாக புதிய கணக்கினை தொடங்கி கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்