"தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்"- செல்வப்பெருந்தகை

தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.;

Update:2024-03-02 12:59 IST

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

இந்த நிலையில் தி.மு.க. உடனான தொகுதிப்பங்கீடு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது ,

டெல்லியில் உள்ள தலைவர்களுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பாக தி.மு.க.நிர்வாகிகள் தொலைப்பேசியில் பேசி வருகின்றனர். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை. தொகுதி பங்கீட்டில் வேறுபாடு இருந்தாலும் அனைவரும் இந்தியா கூட்டணியில்தான் இருப்போம்.

வெகு விரைவில் சுமுகமாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். 40 தொகுதியையும் எங்களுடையதாக கருதி, தேர்தல் பணியாற்றுவோம். தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்