மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை இல்லம்தோறும் சென்று விளக்கவுள்ளோம்-பா.ஜனதா மாநில இணை பொருளாளர் பேட்டி

மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை இல்லம்தோறும் சென்று விளக்கவுள்ளோம் என பா.ஜனதா மாநில இணை பொருளாளர் கூறினார்.

Update: 2023-06-07 18:30 GMT

தமிழக பா.ஜனதாவின் மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது உலக நாடுகளில் உற்றுநோக்கிற நாடாக இந்தியா விளங்குகிறது. பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முத்ரா திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் மேம்பட கடன் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொரோனா தடுப்பூசி கொண்டு வந்து உலக நாடுகளுக்கு கொடுத்துள்ளது. பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை-எளியோருக்கு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தி வருகிறது. உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச கியாஸ் அடுப்புகள் வழங்கி வருகிறது. பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தவணை முறையில் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. சாலை வசதிகள் உலக தரத்தில் போடப்பட்டு வருகிறது. மருத்துவக்கல்லூரிகள் அதிகம் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்றால் அங்குள்ளவர்கள் கடவுளாக பார்க்கின்றனர். 415 புதிய வான்வழி தடங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 66 புதிய விமான நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில்களின் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழக மக்களுக்கும் அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். மேலும் அவர் தமிழ் மொழி மீது பற்று கொண்டுள்ளார். பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை வருகிற 20-ந்தேதி முதல் இல்லம் தோறும் சென்று எடுத்து கூறவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ஜனதா மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்