ஜூன் 23-ம் தேதி மேகதாது குறித்து விவாதிப்போம் - காவிரி நீர் மேலாண்மை ஆணையர் பேட்டி

மேகதாது அணை குறித்து வரும் 23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நிச்சயம் விவாதிப்போம் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-17 13:20 GMT

சென்னை,

தஞ்சை கல்லணை பகுதியில் உள்ள வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி அணைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அதன்பின் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிச்சயம் விவாதிப்போம். மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.

காவேரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு. நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை. யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. ஆகவே அணை விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்