நம் நாட்டை புவியியல் அமைப்பாக பார்க்காமல் தாயாக பார்க்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி

நம் நாட்டை புவியியல் அமைப்பாக பார்க்காமல் தாயாக பார்க்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-25 03:52 GMT

வேளச்சேரி,

நம் நாட்டை புவியியல் அமைப்பாக பார்க்காமல் தாயாக பார்க்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

வேளச்சேரி தனியார் கல்லூரியில் 75-வது சுதந்திர தின அமிர்த மகோத்சவத்தை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவை புவியியல் அமைப்பாக நாம் பார்த்தோமே தவிர வாழும் தாயாக பார்க்கவில்லை என்றார்.

நாட்டு மக்கள் அனைவரும் நம் நாட்டை தாயாக பார்க்க வேண்டும் என்றும், நம் நாடு வலுவாக இருந்தால் மட்டுமே அடுத்த நாடுகள் நம்மை மதிக்கும் என்றும் நாம் வலுவிழந்தால், எல்லோராலும் சூழப்பட்டு விடுவோம் என்றும் பேசினார்.

ராணுவத்தை வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்கள் குறித்த கதைகளை, மாணவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் ராணுவ வீரர்களின் தியாகம், வீரதீர செயல்களை தாங்களே படித்து உத்வேகம் பெற வேண்டும் என்றும் பேசினார்.Full View

Tags:    

மேலும் செய்திகள்