படிக்கும்போதே தொழிற்சாலைகளுக்கு போய் பயிற்சி பெறும் உணர்வை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி
படிக்கும்போதே தொழிற்சாலைகளுக்கு போய் பயிற்சி பெறும் உணர்வை மாணவர்களிடம் நீங்கள் தான் உருவாக்க வேண்டும் தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை கிண்டியில் "எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது" என்ற கருத்தரங்கில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசியதாவது:-
தொழில் முனைவோர்கள், அருகில் உள்ள கல்லூரிகளுடன் நல்ல தொடர்பில் இருங்கள். இதற்கு கல்லூரிகளும் ஒத்துழைக்க வேண்டும். படிக்கும்போதே தொழிற்சாலைகளுக்கு போய் பயிற்சி பெறும் உணர்வை மாணவர்களிடம் நீங்கள் தான் உருவாக்க வேண்டும்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டும், புதுமையான தயாரிப்புகள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வந்தால் போதும்.
பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர வேண்டும். அங்குள்ள கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.