வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பாளையங்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-10-16 18:45 GMT

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன், வக்கீல் அணி மாநில இணைத்தலைவர் மகேந்திரன், வக்கீல் மரியகுழந்தை, மாவட்ட துணைத் தலைவர் லெனின் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட நாயுடு நலச்சங்கத்தினர் மாவட்ட தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நாயுடு இளைஞரணியினர் நாகராஜன் தலைமையிலும், நாயுடு பண்பாட்டுக் கழகத்தினர் பொதுச்செயலாளர் மாடசாமி தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

த.ம.மு.க.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தலைமை நிலைய செயலாளர் சேகர், போக்குவரத்து கழகம் பொது செயலாளர் மகேந்திரன், விவசாய அணி தலைவர் முருகன், மாவட்ட இணைச் செயலாளர் தங்கராஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்