அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-06-27 19:06 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலையாய கடமை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். தொடக்கக்கல்வி அடிப்படை உரிமை ஆக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மாணவர்களை அரசு பள்ளியை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தலையாய கடமையாகும்.

எனவே 5 வயது பூர்த்தியடைந்த அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நலத்திட்ட உதவிகள்

அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத முன்னுரிமை. 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீத முன்னுரிமை. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு. பெண் கல்வி இடை நிற்றலை தடுக்க அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

எனவே 2022-23-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்