என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவே அனைத்து தலைவர்களையும் சந்திக்கிறோம்: ஸ்ரீமதி தாயார்

ஸ்ரீமதியின் பெற்றோர் தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.;

Update:2022-09-03 18:36 IST

சென்னை,

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவியின் பெற்றோர் முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து மனு கொடுத்து வருகிறனர். இந்த நிலையில் அவர்கள் இன்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு கொடுத்துள்ளார்.

இதன் பிறகு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு கட்சி தலைவர்களை சந்தித்து மனு கொடுத்து வருகிறோம். இன்று காலையில் சட்டத்துறை அமைச்சரை சந்தித்து மேல்முறையீட்டை அரசே மேற்கொள்ளவேண்டு என கேட்டுள்ளோம்.

எதிர்கட்சித்தலைவரிடமும் தனது மகளுக்கு நியாயம் கேட்டு மனு கொடுத்துள்ளோம். அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அனைத்து தலைவர்களையும் சந்திப்பது என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே.

இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளும் முரணாக உள்ளது. சிபிசிஐடி மேல் முழு எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அரசு ஏற்று நடத்த கேட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்