தமிழ்நாட்டின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார்கள்- சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்-முதலமைச்சர் ஸ்டாலின்

நெசவாளர்களுக்கு பல திட்டங்களை கேட்காமலேயே வழங்கியுள்ளோம் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-03-11 13:36 GMT

கோவை,

கோவை சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை கருத்தம்பட்டியில் விசைத்தறி நெசவுத்தறி சங்கங்களின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்சியில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:-

ஆடை தயாரிக்கும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை கடமையாக நினைக்கிறேன். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நெசவாளர்களுக்கு உதவிகள் செய்யபப்ட்ட்டு வருகிறது. நெசவாளர்களுக்கு பல திட்டங்களை கேட்காமலயே செய்கிறோம். கைத்தறி துணிகளை தோளில் சுமந்து விற்பனை செய்த இயக்கம் திமுக. மின் கட்டண சலுகையால் கூடுதல் செலவு சென்ற போதிலும் நெசவுத்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்" இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை திமுக அரசு ஊக்குவித்து வருகிறது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் மாநிலம் தான் தமிழ்நாடு. சிலர் தமிழ்நாட்டின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்