மத்திய அரசுடன் சுமூக உறவுடன் இருக்கிறோம் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
மத்திய அரசுடன் சுமூக உறவுடன் இருக்கிறோம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
களியக்காவிளை,
மத்திய அரசுடன் சுமூக உறவுடன் இருக்கிறோம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
ரூ.1 கோடியில் கட்டுமானப்பணி
கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறை சார்பில் குழித்துறையில் ஸ்ரீதேவிகுமாரி பெண்கள் கல்லூரி உள்ளது இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.
மாணவிகளின் வசதியை முன்னிட்டு பொருளாதாரத் துறைக்கு ஆராய்ச்சி மையம் மற்றும் வகுப்பறைக்கான கட்டிடம் கட்டும் பணி ஆகியவை ரூ.1 கோடியில் நடந்து வருகிறது.
இந்தப்பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அறநிலையத்துறை டிவிஷனல் என்ஜினீயர் மோகன் தாஸ், உதவி என்ஜினீயர் அய்யப்பன் ஆகியோர் கட்டுமானப்பணி குறித்து விளக்கினார். அப்போது கல்லூரி முதல்வர் டாக்டர் உஷா, பொருளாதார துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் பிந்துஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
சுமூக உறவு
பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அறநிலைய துறையின் கீழ் குழித்துறையில் நீண்ட காலமாக ஸ்ரீ தேவி குமாரி கல்லூரி உள்ளது. இங்கு கல்வி பயிலும் மாணவிகளின் வசதிக்காக மேலும் ரூ.5 கோடியில் புதிய கட்டுமான பணிக்கான திட்டமும் நிறைவேற்றப்பட உள்ளது இந்த கல்லூரியின் தரத்தை மேம்படுத்தி வசதியான ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்.
மார்த்தாண்டம் முதல் வெட்டுவெந்நி வரை உள்ள சாலையை சீரமைக்க முயற்சி மேற்கொண்டு உள்ளேன்.
தமிழக மக்களின் நலனுக்காக மத்திய-மாநில அரசுகளின் உறவு நல்ல நிலையில் இருக்க வேண்டும். உரிமைக்காக போராடவும் வேண்டும். மத்திய அரசுடன் சுமூக உறவுடன் தான் இருக்கிறோம்.
நாகர்கோவிலில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் எனது மகன் பங்கேற்கவில்லை. சாதாரண நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது இயற்கையாகும். பா.ஜனதா கூறியுள்ள புகார் பொய்யாகும்.
இவ்வாறு அவர் கூறினார்