நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

நெமிலி அருகே நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடபட்டனர்.

Update: 2023-03-09 17:54 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த அகவளம் கிராமப்புற பகுதியில் சிப்காட் அமைக்க அரசு நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சென்னை-பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலைக்கு தனியார் நிறுவனம் அனுமதியின்றி மண் அள்ளியதாக கூறப்படுகிறது.

மண் அள்ளிய தனியார் நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் அகவளம் கிராமத்தில் மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்