நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ஹரி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கர்நாடக அரசு உரிய முறையில் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மண்டல செயலாளர் தவ்சீக், தொகுதி செயலாளர் பிரகாஷ், தலைவர் பாஸ்கர் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.