அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-13 04:14 GMT

சென்னை,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் கிடைத்ததும் நடைபயிற்சி சென்று இருந்த செந்தில் பாலாஜி அவசரமாக வீடு திரும்பினர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி கூறியதாவது:-

அமலாக்கத்துறை சோதனை குறித்து சட்டப்படி எனக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. வருமான வரித்துறையில் பறிமுதல் செய்த விவரங்கள் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனை முடிந்த பிறகு முழு விவரம் தெரியவரும். அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டால் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம். சோதனை முடிவில் தான் என்ன நோக்கத்துடன் வந்துள்ளார்கள் என்று தெரியும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்