மதுக்கடை விற்பனையாளரிடம் வழிப்பறி

மதுக்கடை விற்பனையாளரிடம் வழிப்பறி செய்யப்பட்டது.

Update: 2023-04-23 18:45 GMT

சிவகங்கையை அடுத்த கொட்டகுடியை சேர்ந்தவர் ஜெய கிருஷ்ணன். இவர் மதகுபட்டியில் உள்ள அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். சம்பவத்தன்று இரவு ஜெயகிருஷ்ணன் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் மதகுபட்டி அருகே உள்ள மதுரை வீரன் கோவில் அருகே வரும்போது அந்த வழியில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் ஜெயகிருஷ்ணனை வழிமறித்து வாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2600 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது தொடர்பாக மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாச்சாங்களை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்