கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை கீழத்தோப்பை சேர்ந்தவர் முனுசாமி (வயது 49). சம்பவத்தன்று இவர் நரிமேடு பகுதியில் நடந்து சென்றபோது ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பதுங்கி இருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி முனுசாமியிடமிருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றது.இதுகுறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜபுரம், குமரன் தெருவை சேர்ந்த வீரபாண்டி (23), கோரிப்பாளையம் சேக் முகமது (21), நரிமேடு முகமது ஷாஜகான் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நரிமேடு சபீக் என்பவரை தேடி வருகின்றனர்.