வாலிபரை தாக்கி ரூ.45 ஆயிரம் வழிப்பறி

வாலிபரை தாக்கி ரூ.45 ஆயிரம் வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-11-17 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அடுத்த சாக்கோட்டை போலீஸ் சரகம் பிரம்புவயலை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 23). இவரது நண்பர் முருகானந்தம் (24). இவர்கள் பிளம்பிங் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் ரூ.45 ஆயிரத்தை எடுத்து கொண்டு பிரம்புவயலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென உருட்டுக்கட்டையால் பாண்டியராஜன் தலையில் ஓங்கி அடித்தனர். இதில் பாண்டியராஜனும், முருகானந்தமும் கீழே விழுந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ரூ.45 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்