குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம்

கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-06-29 17:24 GMT

கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மினிடேங் போன்றவற்றின் மூலமாகவும், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் நா.விநாயகம் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் திருமால், பயிற்சியின் அவசியம், நீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், சுகாதாரமான முறையில் குடிநீரை பயன்படுத்துவதன் அவசியம் பற்றியும் பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகராசி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தேசிங்குராஜா, உதவி பொறியாளர் கலைப்பிரியா, மஞ்சுநாதன், ராஜா ஆகியோர், பம்ப் ஆபரேட்டர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வார்டு உறுப்பினர் ஆகியோருக்கு பயிற்சி அளித்து கையேடு வழங்கினர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு நன்றி கூறினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராமக் குடிநீர் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5 பேர் வீதம் 39 ஊராட்சிகளுக்கு 190 பேருக்கு 5 கட்டங்களாக இந்த பயிற்சி நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்