பாதையை மறைத்து குடிநீர் தொட்டி

பாதையை மறைத்து குடிநீர் தொட்டி வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

Update: 2023-08-01 10:50 GMT

அவினாசி

கருவலூர் ஊராட்சிப்பகுதியில் சாலையை மறைத்து கட்டப்பட உள்ள மேல்நிலை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கருவலூர் ஊராட்சி 6-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 20 அடி பாதையை மறைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில்பள்ளம் தோண்டி உள்ளனர். பொதுமக்கள் இது குறித்து கேட்டால்முறையாக பதில் தருவதில்லை. எனவே அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மேல்நிலை தொட்டி கட்டுவதை மாற்றி அண்ணா நகர் தெற்கு பகுதியில் புதிதாக உள்ள காலி இடத்தில் இந்த மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்