ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

Update: 2022-06-11 16:03 GMT

சீர்காழி:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராகவும், காவி நிறமாகவும் மாறியதால் ஊராட்சி சார்பில் மெயின் ரோடு அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி போதிய பராமரிப்பு இன்றி தற்போது சிமெண்டு காரைகள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. அதன் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் ஆபத்து இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக அகற்றிவிட்டு, புதிதாக குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்