காலிங்கராயன் வாய்க்காலில் 16-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
தற்போது காலிங்கராயன் வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் காலிங்கராயன் வாய்க்காலில் வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என காலிங்கராயன் மதகு பாசன விவசாயிகள் சபை - 6-ன் சார்பில் கீழ்பவானி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவில், 'இந்த ஆண்டு பவானிசாகர் அணையில் போதுமான தண்ணீர் இருக்கிறது. எனவே எங்கள் பாசன பகுதியில் மஞ்சள், வாழை, கரும்பு, மற்றும் நெல் போன்ற பயிர்கள் பயிரிட இது உகந்த காலம் ஆகும். எனவே காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக வருகிற 16-ந் ேததி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்,' என குறிப்பிட்டிருந்தனர்.