மேற்கு ெதாடர்ச்சி மலையில்பெய்து வரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேற்கு ெதாடர்ச்சி மலையில்பெய்து வரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தளி
மேற்கு ெதாடர்ச்சி மலையில்பெய்து வரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மழைவாழ் மக்கள்
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அதுவும் இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை மலைவாழ் மக்கள் ஆறுகள் மூலமாக பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
நெல், தினை, சாமை, ராகி, இஞ்சி, மரவள்ளி, தென்னை, வாழை, எலுமிச்சை, பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. வடுமாங்காய், நெல்லிக்காய், தேன், கடுக்காய், சீமாறு, தைல புல் உள்ளிட்டவை சீசனுக்கு ஏற்றாற்போல் வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்றன. அதுமட்டுமின்றி ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் உள்ளிட்ட சுயதொழில்களில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை
இந்த சூழலில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அத்துடன் குடிநீர், பாசனத்திற்கான தண்ணீர் பஞ்சமும் முடிவுக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி வனப்பகுதியில் சில்லென்ற காற்றும் வீசி வருகிறது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆறுகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் வனப்பகுதியில் இயற்கை விவசாயம் புத்துயிர் பெற்று உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மழையின் தாக்கம் சீரடைந்த பின்பு புத்துணர்வோடு உழவு பணிகளை தொடங்க உள்ளதாக தெரிவித்தனர்.ஆனால் தொடர் மழையின் காரணமாக அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
----