நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

மணஞ்சேரியில் வீரசோழன் ஆறு பிரியும் தலைப்பு பகுதியில் நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-06 20:57 GMT

கும்பகோணம்:

திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக சுப்ரமணியன் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து காவிரி வடிநில கோட்டப்பகுதிகளில் ஆறுகளில் தண்ணீர் திறப்பு மற்றும் தலைப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கும்பகோணம் அருகே உள்ள மணஞ்சேரி பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து வீரசோழன் ஆறு பிரியும் தலைப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீரசோழன் ஆற்றின் தலைப்பு பகுதியில் செய்யப்பட்டுள்ள கட்டுமான பணிகள் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் அளவு, புதிதாக தூர்வாரப்பட்டுள்ள பாசன வாய்க்கால்கள் மற்றும் படுக்கை அணை உள்ளிட்ட விவரங்களை கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின் போது காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் வீரமணி, முத்துமணி மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்