காரைக்குடியில் குடிநீர் பிரச்சினை
காரைக்குடியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.
காரைக்குடி,
காரைக்குடியில் 36-வது வார்டு பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீரை பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.