சாலைகளில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்

பழனியில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழையால், சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

Update: 2022-07-28 16:49 GMT

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் சாரல் மழையும் பெய்தது. நேற்றும் காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இரவு 8.30 மணி அளவில் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 40 நிமிடம் நீடித்த இந்த மழையால் பழனி நகரின் சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

குறிப்பாக திண்டுக்கல் ரோடு, ஆர்.எப்.ரோடு, பூங்கா ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு ஆகிய இடங்களில் சாலையே தெரியாத அளவுக்கு தண்ணீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பூங்கா ரோடு பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் சென்றதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதற்கிடையே பழனி முருகன் கோவில் படிப்பாதையில் மழை தண்ணீர் அருவி போல் ஓடியது. கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்த அந்த காட்சியை பக்தர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்