மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.55 அடியில் இருந்து 54.85 அடியாக உயர்ந்துள்ளது.
சேலம்,
மேட்டூர் அணையின் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,498 கன அடியில் இருந்து 7,563 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் தற்போது 20.79 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.55 அடியில் இருந்து 54.85 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.