வீட்டில் வாட்டர் ஹீட்டரால் ஏற்பட்ட தீ
வீட்டில் வாட்டர் ஹீட்டரால் தீ விபத்து ஏற்பட்டது.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டியை சேர்ந்தவர் சாகிதா பேகம்(வயது 70). இவர் நேற்று வீட்டில் ஒரு பிளாஸ்டிக் வாளியில் நீர் நிரப்பி, அதில் மின்சாரத்தில் இயங்கும் வாட்டர் ஹீட்டர் கருவியை வைத்திருந்தார். அப்போது கருவியின் ஒயர் தீப்பிடித்து அருகில் இருந்து வாஷிங் மெஷின் மற்றும் மின்சார அடுப்பு தீப்பற்றி எரிய தொடங்கியது. மேலும் அருகில் இருந்த கியாஸ் சிலிண்டரின் உருவம் மாறி வெடிக்கும் நிலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் கியாஸ் சிலிண்டரை வெளியில் எடுத்து வந்து, அதில் தண்ணீரை பீய்ச்சி அடித்து பெரும் விபத்தை தவிர்த்ததுடன், கியாசையும் முழுவதுமாக வெளியேற்றினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.