மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக உயர்வு

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

Update: 2022-09-06 03:48 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு வரும் நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியில் இருந்து 80 ஆயிரம் கன அடியாக இன்று அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப் படுகிறது. நீர் இருப்பு 93.47டி.எம்.சியாக உள்ளது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடியும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 57 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்