தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

கனமழையின் காரணமாக தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

Update: 2022-09-05 18:31 GMT

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 3 மணி அளவில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 3 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் நடந்து சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், இந்த கன மழையினால் திருவாரூர் தியாகராஜர் கோவில் கிழக்கு கோபுர வாசல் 2-வது பிரகாரம் பகுதியில் மழைநீர் புகுந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்