அம்ருத் திட்டத்தில் ரூ.25 கோடியில் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு

ஒடுகத்தூர் பேபூராட்சியில் அம்ருத் திட்டத்தில் ரூ.25 கோடியில் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-06-30 17:43 GMT

ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.25 கோடியே 30 லட்சத்தில் 15 வார்டுகளிலும் புதிய குடிநீர் பைப்லைன் அமைத்து வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் புதிய குடிநீர் பைப்புகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்க 15 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்