பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றம்...!
பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் வழியாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகின்றது.;
குமரி மாவட்டத்தின் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. கடந்த 19-ம் தேதி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் குளிர்ந்த சீதோசன நிலை நிலவியது.
இத்தகைய தொடர் மழையால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 44.56 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1,346 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நிரம்பி வருவதை தொடர்ந்து கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பேச்சிப்பாறை அணை நிரம்பிய நிலையில் அணையின் மறு கால் மதகுகள் வழியாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.