போலீஸ் நிலையங்கள், அலுவலகங்களில் பறவைகளுக்காக தண்ணீர், தானிய வகைகள்

போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நடவடிக்கையின் பேரில் அலுவலகங்களில் பறவைகளுக்காக தண்ணீர், தானிய வகைகள் வைக்கப்பட்டது.

Update: 2023-04-20 13:39 GMT

போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நடவடிக்கையின் பேரில் அலுவலகங்களில் பறவைகளுக்காக தண்ணீர், தானிய வகைகள் வைக்கப்பட்டது.

100.4 டிகிரி வெயில்

வெயிலுக்கு பெயர் பெற்ற ஊர்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்றாகும். மேலும் திருவண்ணாமலையை அக்னி ஸ்தலம் என்றும் கூறுவார்கள்.

அக்னி ஸ்தலம் என்பதற்கு ஏற்ப திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. பகல் நேரத்தில் வீட்டில் இருந்து மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு அவதி அடைந்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக சாதாரணமாக திருவண்ணாமலையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி வருகிறது. இந்த நிலையில் இன்று திருவண்ணாமலையில் 100.4 டிகிரி வெயில் அளவு பதிவானது.

தண்ணீர், தானிய வகைகள்

சுட்டெரிக்கும் கடுமையான வெயிலினால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும், பறவைகளும் அவதி அடைகின்றன.

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நடவடிக்கையின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் போலீஸ் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக குடிநீர் மற்றும் பறவைகள் உண்பதற்காக தானிய வகைகளும் இன்று முதல் வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறுகையில், கோடைக்காலம் தொடங்கி வெயில் கடுமையாக சுட்டெரித்து வருவதால்

பறவைகள் தண்ணீரின்றி சுற்றித்திரியும் நிலையினை கருத்தில் கொண்டு பறவைகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் காவல் துறை தொடர்பான அனைத்து அலுவலகங்கள் என 70-க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக குடிநீர் மற்றும் பறவைகள் உண்பதற்கு தானிய வகைகளும் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்