குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்

சோமவாரப்பட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Update: 2023-04-08 17:41 GMT

சோமவாரப்பட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து பொதுமக்கள் வலியுறுத்தினர்.

குடிநீர் பிரச்சினை

குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளும் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமவாரப்பட்டி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வணிக நிறுவனங்கள், வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெதப்பம்பட்டிக்கு வந்து செல்கின்றனர். சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனக் கூறி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சிவகுருநாதனை சந்தித்து வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

குடிநீர் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கண்ணன், உதவிசெயற்பொறியாளர் சின்னசாமி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்