தரிசுநில மேம்பாட்டு திட்டம்

தரிசுநில மேம்பாட்டு திட்டத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Update: 2023-10-08 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள காரைக்குளம் கிராம ஊராட்சியில் சிறுகுளம் கிராமத்தில் 20 பயனாளிகளுக்கு தரிசு நில மேம்பாட்டு திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கலந்துகொண்டு புதிய ரக மாமரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாமர கன்றுகள், பண்ணை கருவிகள், விதை உளுந்து, கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான், தார்பாய்கள், ரசாயன உரங்கள் போன்ற இடுபொருட்களை வழங்கி நீர் பாசன வசதியை மேம்படுத்தும் விதமாக போர்வெல் அமைத்து சொட்டு நீர் பாசன வசதியை ஏற்படுத்தி தரும் விதமாக விவசாயிகளுக்கு வேளாண் துறை வழங்கி உள்ளது.

வேளாண் உதவி இயக்குனர் தங்கபாண்டியன், தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன், வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா, தோட்டக்கலை அலுவலர் தன்ராஜ், துணை வேளாண்மை அலுவலர் நடேச குமார், உதவி வேளாண்மை அலுவலர் யுவராணி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் திருவேங்கடம், சரவணன் கலந்துகொண்டு தரிசான நில மேம்பாட்டு திட்டங்கள் பற்றி கூறினா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், காளிமுத்து, ராஜபாண்டி, ராஜேந்திரன், சிவனேசன், கண்ணன், முருகேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்