குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

திருப்பத்தூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

Update: 2022-09-28 18:45 GMT

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

குழாயில் உடைப்பு

திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் 7ஏ முக்கு சாலை உள்ளது. இங்கு காவிரி கூட்டுக்குடிநீ்ர் குழாய் உள்ளது. இந்த குழாயில் கடந்த சில தினங்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இவ்வாறு வீணாகும் தண்ணீர் அங்குள்ள நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் குளம் போல ஆங்காங்கே சாலையில் தேங்கி நிற்கிறது.

சாலையில் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சாலையும் சேதமடைந்து வருகிறது.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 7ஏ முக்கு சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தினமும் வீணாகி வருகிறது. இதனால் பல பகுதிகளில் குறைந்த அளவிலேயே குடிநீர் கிடைக்கிறது. மேலும் சாலையில் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால் சாலையும் சேதமடைந்து விட்டது.

இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்