பவானிசாகர் பகுதியில் பதுங்கி இருந்த2 பேரை பிடித்து சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள்கேரளாவில் சதித்திட்டம் தீட்டினார்களா? என விசாரணை

பவானிசாகர் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளாவில் சதித்திட்டம் தீட்டினார்களா? என விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Update: 2023-07-18 21:01 GMT

பவானிசாகர் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து சென்றனர். அவர்கள் கேரளாவில் சதித்திட்டம் தீட்டினார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.

தேசிய புலனாய்வு முகமை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக கேரளாவில் இருந்து வந்திருந்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தலமையில் அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று பலரிடம் துருவித்துருவி விசாரணையில் ஈடுபட்டனர்.

இறுதியாக பவானிசாகரை அடுத்து உள்ள தொட்டம்பாளையம் பகுதிக்கு சென்ற அதிகாரிகள், அங்குள்ள ஒரு தோட்டத்து வீட்டுக்கு சென்றனர். அங்கு 2 பேர் சந்தேகத்துக்கு உரிய வகையில் தங்கி இருப்பதை கண்டறிந்த அவர்கள், உடனடியாக பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

2 பேர் பிடிபட்டனர்

அதைத்தொடர்ந்து போலீசார் விரைந்துசென்று, குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அந்த வீட்டுக்குள் இருந்த 2 பேரை பிடித்தனர். அவர்களில் ஒருவரின் பெயர் ஆசிப் (வயது 36). இன்னொருவர் அவரது நண்பர் என்று கூறப்படுகிறது.

இவர்கள் கேரளாவில் சதிச்செயல் திட்டம் தீட்டி இருக்கலாம். அல்லது சதி செயல்களில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி வந்து பவானிசாகர் பகுதியில் பதுங்கி இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த தகவலையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. பிடிபட்ட 2 பேரையும் அவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிர்ச்சி

கடந்த ஆண்டு ஈரோட்டில் மாணிக்கம்பாளையம் பகுதியில் ஒருவர் பதுங்கி இருந்ததை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்தநிலையில் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்துக்கு வந்திருந்து பதுங்கி இருந்த 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்