வெடிகுண்டு வீசப்பட்டதா?

நெல்லை டவுனில் வெடிகுண்டு வீசப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-16 22:16 GMT

நெல்லை டவுனில் வெடிகுண்டு வீசப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்ம பொருள் வெடித்தது

நெல்லை டவுன் குற்றாலம் ரோடு பகுதியில் உள்ள ஒரு புரோட்டா கடை முன்பு நேற்று இரவு திடீரென்று மர்ம பொருள் வெடித்த சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து அங்கு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

கார் பறிமுதல்

அப்போது 2 கும்பலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் வெடிகுண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதுதொடர்பாக அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்