விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் புகார் தெரிவிக்கலாம்கள ஆய்வு நடத்திய அதிகாரிகள் தகவல்

Update: 2023-05-10 19:00 GMT

தர்மபுரி வன கோட்டத்திற்குட்பட்ட பென்னாகரம் வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் காணப்படும் தேவனூர், மசக்கல், பதனவாடி காப்புக்காட்டையொட்டி சிகரலஅள்ளி, சின்னப்ப நல்லூர், சந்தைப்பேட்டை, எம்.தண்டா ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர்கள் மணிமேகலை, செந்தில் முருகன், வனச்சரக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதா? மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறதா? என்பது குறித்து கள ஆய்வு நடத்தினார்கள். அப்போது கிராம மக்களை சந்தித்து பேசிய அதிகாரிகள் குழுவினர் விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி அமைக்க கூடாது. திருட்டுத்தனமாக மின் வேலி அமைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வனச் சட்டம் மற்றும் இந்திய மின்சார சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும். திருட்டுத்தனமாக மின் வேலிஅமைத்தல் தொடர்பாக பொதுமக்கள் தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அப்போது தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்