எச்சரிக்கை
கால்நடைகளை சுற்றித்திரிய விடும் உாிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 17ஆயிரத்திற்கும் ்மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள், ஆடு மாடுகளை கட்டி போட்டு வளர்க்காமல் சாலைகளில் சுற்றித்திரிய விடுகின்றனர். இதனால் நாள்தோறும் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த கால்நடைகள் தலைஞாயிறு கடைவீதிகளில் பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. எனவே கால்நடை உரிமையாளர்கள் ஆடு, மாடுகளை தங்கள் வீடுகளிலேயே வைத்து வளர்க்க வேண்டும். சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரியவிடும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.