பாம்பு கடித்து வார்டு உறுப்பினர் சாவு

வேடசந்தூர் அருகே பாம்பு கடித்து வார்டு உறுப்பினர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-29 19:30 GMT

வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டியை சேர்ந்தவர் மகுடீஸ்வரன். அவருடைய மனைவி நாகரத்தினம் (வயது 45). இவர், ஜி.நடுப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக இருந்தார். நேற்று காலை இவர், தனது தோட்டத்தில் வெங்காயம் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வெங்காய பயிர்களுக்குள் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று, நாகரத்தினத்தின் வலது கை மணிக்கட்டில் கடித்தது. இதனையடுத்து அங்கிருந்த அவரது மகன் விஜயராகவன், நாகரத்தினத்தை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாகரத்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்