வார்டு குழு கூட்டம்

நெல்லை மண்டல வார்டு குழு கூட்டம் நடைபெற்றது;

Update: 2022-11-25 21:15 GMT

நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டல வார்டு குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பைஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ரவீந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களுடைய வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். கவுன்சிலர் மாரியப்பன் பேசுகையில், வார்டு குழு கூட்டத்தில் பேசுகின்ற எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. நெல்லை மண்டல பகுதியில் எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் மக்களை சந்திக்க முடியவில்லை என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் குடிசை மாற்று வாரிய பகுதியில் பூங்கா அமைத்தல், கழிவு நீர் ஓடையில் உள்ள மண்ணை அகற்றுதல், தெருவிளக்கு அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்