போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த மெக்கானிக் கைது

போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-18 18:35 GMT

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள சின்னாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 23). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவருக்கும், சிறுமி ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த சிறுமியை ரமேஷ் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் கடந்த 4-ந் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ரமேஷை அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்