கஞ்சா வழக்கில் தேடப்பட்டவர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-21 16:23 GMT

திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் போத்துநாகராஜ் (வயது 37). கஞ்சா கடத்தலில் தொடர்புடைய இவரை, சென்னை போதைபொருள் கடத்தல் பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி போத்துநாகராஜ் காரில் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரது காரை பின்தொடர்ந்து தங்களது வாகனத்தில் வந்தனர். வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் இருந்து சாணார்பட்டி நோக்கி செங்குறிச்சி சாலையில், போத்துநாகராஜ் காரை ஓட்டி சென்றார்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு சென்னை போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், செங்குறிச்சி-கணவாய்பட்டி வனச்சாலையில் வேட்டைகாரன்புதூர் அருகே காரை மடக்கினர். பின்னர் காரை ஓட்டி வந்த போத்துநாகராஜை பிடித்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்