ஏலகிரி மலையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

சனி ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதன் எதிரொலியாக மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

Update: 2022-05-29 17:17 GMT

ஜோலார்பேட்டை

சனி ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதன் எதிரொலியாக மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

ஏழைகளின் ஊட்டி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. 1800 மீட்டர் உயரம் கொண்ட ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட சிறந்த மலைவாசஸ்தலமாக விளங்குகிறது.

இங்கு ஆண்டு முழுவதும் ஒரேமாதிரியான சீதோஷ்ண நிலை இருந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் ஏலகிரிமலைக்கு வருகின்றனர்.

அலைமோதியது

சனி, ஞாயிற்றுக்கிழமை தொடர்விடுமுறை என்பதாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடபங்பட்டதாலும் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் படகுசவாரி செய்தும் பூங்காக்களையும் இயற்கை எழில் கொஞ்சும் மலையையும் ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்