கொல்லிமலை மாற்றுப்பாதையில் கனமழைக்கு தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது

கொல்லிமலை மாற்றுப்பாதையில் கனமழைக்கு தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது

Update: 2022-11-14 18:45 GMT

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் கொல்லிமலை மாற்றுப்பாதையில் உள்ள கீழ்பூசணி குழி கிராமத்தில் மழைநீர் வடிகாலுடன் கூடிய தடுப்பு சுவர் சுமார் 15 மீட்டர் தொலைவுக்கு சரிந்து விழுந்தது. அந்த சுவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நாமக்கல் கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், சேந்தமங்கலம் உதவி பொறியாளர் பிரனேஷ் அறிவுறுத்தலின்பேரில் பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று 1,500 மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

தற்போது தற்காலிக சீரமைப்பு பணி நடந்துள்ளது என்றும், இன்னும் சில மாதங்களில் அந்த பகுதி நிரந்தரமாக சீரமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்