மதுரை மத்திய சிறையில் கைதிகளின் உடல்நலம் காக்க நடைபயிற்சி திட்டம் தொடக்கம்
சிறைவாசிகள் சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு நடைபயிற்சி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை மத்திய சிறையில் கைதிகளின் உடல்நலத்தைக் காக்க நடைபயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை டி.ஐ.ஜி. பழனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் சிறைவாசிகள் சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு நடைபயிற்சி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உடல்நலத்திற்காகவும், மனரீதியாக அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் இந்த நடைபயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.